மாவட்ட செய்திகள்

பெயிண்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The law of thugs

பெயிண்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெயிண்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெயிண்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெருந்துறை
பெயிண்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 
பெயிண்டர்
பெருந்துறையை அடுத்துள்ள சிலேட்டர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 28). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி, பெருந்துறை மருத்துவ கல்லூரி அருகே ரோட்டோரத்தில் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, முத்துப்பாண்டியை கொலை செய்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார்கள். 
4 பேர் கைது 
போலீசாரின் விசாரணையில் பெருந்துறை மஜீத்வீதியை சேர்ந்த அபிரகுமான் (26), பெருந்துறை சென்னியவலசை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (34), இவரின் தம்பி ஜெயச்சந்திரன் (31), ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த பிரபு (29) ஆகியோருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது மதுபோதையில் பெயிண்டர் முத்துப்பாண்டியை கொலை செய்துவிட்டதாக கூறினார்கள். அதனால் 4 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் போலீஸ் விசாரணையில் அபிரகுமான் மீது பெருந்துறை போலீஸ் நிலையத்தில் 6 குற்ற வழக்குகளும், ஜெயப்பிரகாஷ் மீது பெருந்துறை போலீஸ்நிலையத்தில் 2 குற்ற வழக்குகளும், ஜெயச்சந்திரன் மீது 2 குற்ற வழக்குகளும், பிரபு மீது 2 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
ஏற்கனவே இதுபோல் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இந்த 4 பேரும் கொலை வழக்கிலும் ஈடுபட்டு இருப்பதால் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்பேரில்  4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோவில் 2-வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும்; கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை
போக்சோவில் 2 -வது முறை கைதானால் குண்டர் சட்டம் பாயும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை