மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்


மூங்கில்துறைப்பட்டு பகுதியில்  தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 7 March 2021 5:12 PM GMT (Updated: 7 March 2021 5:12 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்

மூங்கில்துறைப்பட்டு

கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர்நிலைப் பகுதிகளில் தண்ணீர் இருந்தும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெப்பத்தின் காரணமாக உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தையும் வருத்துகிறது. இதனால் கரும்புசாறு, பதனீர், சர்பத், மோர், இளநீர், பழ ஜூஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, வெள்ளரிப்பழம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொள்கின்றனர். கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து சாலையோரங்களில் தாகம் தணிக்க சிலர் கடைகள் வைத்து கரும்புசாறு, பழஜூஸ், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை வியாபாரம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள இளையாங்கண்ணி கூட்ரோடு பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக மலைபோன்று குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் வாங்கி சாப்பிடுவதற்காக சில வியாபாரிகள் தர்பூசணியை துண்டு துண்டாக வெட்டி ஒரு துண்டு ரூ.5, ரூ.10 என விற்பனை செய்கின்றனர். இவற்றை பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர், சிறுமியர்களும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

Next Story