மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2021 6:24 PM GMT (Updated: 2021-03-07T23:54:13+05:30)

மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

பேரையூர், 
சேடப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சென்னம்பட்டியை சேர்ந்த தொந்தியம்மாள் (வயது 55) என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் காளப்பன்பட்டியை சேர்ந்த மொக்கதுரை (46) என்பவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கம்மாளப்பட்டியை சேர்ந்த சின்னசாமி (48) என்பவர் காளப்பன்பட்டி கண்மாய்கரையில் விற்பனை செய்ய 13 மது பாட்டில்களை வைத்திருக்கும்போது, போலீசாரை பார்த்தவுடன் மதுபாட்டில்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை தேடி வருகின்றனர்.

Next Story