வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2021 6:36 PM GMT (Updated: 7 March 2021 6:36 PM GMT)

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பனைக்குளம்
தனியார்மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுடமை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் பாரதி நகரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் சென்ட்ரல் வங்கி உதவி மேலாளர் சிவக்குமார் தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் பேங்க் ஆப் இந்தியா நவீன் சக்கரவர்த்தி, இந்தியன் வங்கி சுரேஷ், ஆண்டன் மைக்லோ முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், மேலும் வங்கியில் உள்ள ரூ.145 லட்சம் கோடி மக்களின் சேமிப்பு பணம் எனவும், மக்கள் சேமித்த பணத்தை தனியாரிடம் கொடுக்க கூடாது எனவும், மக்கள் சேமித்த பணத்தை  கார்ப்பரேட்டுகள் நிர்வகிக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர். 
தனியார்மயம்
மேலும் வங்கி ஈட்டும் லாபம் எல்லாம் வரா கடனுக்கு வரவு வைத்து அனைத்து வங்கிகள் நஷ்டம் என்று மத்திய அரசு தனியாரிடம் வங்கிகளை ஒப்படைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. வராக்கடன் உயர்வதற்கு வங்கி ஊழியர்கள் காரணமல்ல. இதற்கு அதிகாரிகளும் காரணம் அல்ல. 
எனவே வங்கிகளை தனியார்மயம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் பாரதி நகர் அருகாமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story