மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ள மகன் மறுத்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Mother commits suicide by hanging after son refuses to marry

திருமணம் செய்து கொள்ள மகன் மறுத்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் செய்து கொள்ள மகன் மறுத்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் செய்து கொள்ள மகன் மறுத்ததால் விரக்தி அடைந்த தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமணத்துக்கு மறுப்பு
ஆவடி வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மலர்கொடி (வயது 52). இவர்களுடைய மகன் யஸ்வந்த் (30).ராஜேந்திரனும், மலர்கொடியும் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பெங்களூருவில் உள்ள உறவினரின் மகளை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததாக தெரிகிறது.ஆனால் யஸ்வந்த், தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என மறுத்தார். ஏற்கனவே மலர்கொடி, தனது மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையில் மீண்டும் தனது மகன், திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் விரக்தியடைந்த மலர்கொடி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்த மலர்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
கே.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டார்.
5. தூத்துக்குடி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.