நாமக்கல் அருகே துணை ராணுவத்தினர் சென்ற வேன் மோதி 2 பேர் படுகாயம்


நாமக்கல் அருகே துணை ராணுவத்தினர் சென்ற வேன் மோதி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 March 2021 6:47 PM GMT (Updated: 2021-03-09T00:17:29+05:30)

நாமக்கல் அருகே துணை ராணுவத்தினர் சென்ற வேன் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோகனூர்:
சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பெங்களூருவில் இருந்து துணை ராணுவத்தினர் 15 பேர் நேற்று ரெயில் மூலம் சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டனர். வழியில் நாமக்கல்லை அடுத்த என்.புதுப்பட்டி பகுதியில், துணை ராணுவத்தினர் சென்ற வேன் ஒரு மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நாமக்கல் மேட்டுப்பட்டி முகாமை சேர்ந்த சுதாகர் (வயது 27), மொபட்டில் சென்ற அ.வாழவந்தியை சேர்ந்த ராஜ்குமார் (57) ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ராஜ்குமார் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story