ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 8 March 2021 7:15 PM GMT (Updated: 2021-03-09T00:46:52+05:30)

ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத்தில்(ரேஞ்ச்-1) உள்ள பத்துலைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் 3 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. 

இரவு தொடங்கி அதிகாலை வரை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். நேற்று முன்தினமும் இதே நிலை நீடித்தது. உடனே சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

ஆனாலும் அவை தொடர்ந்து ஊருக்குள் வருவதால், தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர்கள் சசிகுமார், கவுதமன் மற்றுமு் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story