அம்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்


அம்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 11:14 AM GMT (Updated: 2021-03-09T16:44:37+05:30)

அம்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம், ஆவின் பால் பண்ணை சந்திப்பில் அம்பத்தூர் மண்டல சுகாதார அலுவலரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கேசவன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த பொன்னேரியை சேர்ந்த பிரகாஷ் (வயது 35) என்பவரிடம் ரூ.86 ஆயிரத்து 500 இருந்தது. விசாரணையில் உரிய ஆவணம் இன்றி அந்த பணத்தை அவர், சென்னை பெசன்ட் நகருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.60 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்தை தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மயிலாப்பூர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைந்தனர். இதுதொடர்பாக அதன் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த காளிமுத்து (32) என்பவரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story