பாரூர், போச்சம்பள்ளி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


பாரூர், போச்சம்பள்ளி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2021 5:57 PM GMT (Updated: 2021-03-09T23:56:50+05:30)

போச்சம்பள்ளி, பாரூர் பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.  
சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த விஜயகுமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர்

பாரூர் அருகே உள்ள நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஒசிராஜா (28). இவர் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story