மாவட்ட செய்திகள்

மகளிர் தினம் கொண்டாட்டம் + "||" + Women's Day Celebration

மகளிர் தினம் கொண்டாட்டம்

மகளிர் தினம் கொண்டாட்டம்
மகளிர் தினம் கொண்டாட்டம்
அறந்தாங்கி:
அறந்தாங்கி உதவி கலெக்டர், நகராட்சி அலுவலகங்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உதவி கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமையில் பெண்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் அறந்தாங்கியில் நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் டெங்கு ஒழிப்பு பெண் பணியாளர்களுக்கு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு அனைத்து பெண் பணியாளர்களுக்கும் நினைவு பரிசாக சேலை, பாத்திரங்களை சுகாதார ஆய்வாளர் சேகர் வழங்கி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
கீரனூர் அருகே உள்ள சூசை புடையான் பட்டி கிராமத்தில்  தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் உலக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார 25 கிராமங்களை சேர்ந்த 50 சுய உதவிக்குழுவை சேர்ந்த 600 பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெண்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் மணிமேகலை தலைமையில் சர்வதேச பெண்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மே தினம் கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
2. துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை
3. கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
4. கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கறம்பக்குடியில் தேவேந்திரகுல அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
5. சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாட்டம்
காதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசலில் போலீஸ் பாதுகாப்புடன் காதல் திருமணம் செய்த தம்பதிகள் கேக்வெட்டி கொண்டாடினார்கள்.