தந்தை, மகனுக்கு கத்திக்குத்து


தந்தை, மகனுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 March 2021 1:38 AM IST (Updated: 10 March 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

காரியாபட்டி, 
நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 58). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (26) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குமரவேல் வீட்டில் இருந்த போது ஜெயப்பிரகாஷ், அவரது நண்பர்கள் முனியசாமி (23), சுப்புராஜ் (28), சசிக்குமார் (24), ராமர் (25) ஆகியோர் சென்று குமரவேலுவிடம் பேசிக் கொண்டிருந்த போது வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது குமரவேலு சத்தம் கேட்டு அவரது மகன் தங்கமுத்து வந்துள்ளார். அப்போது ஜெயப்பிரகாஷ், குமரவேல் வயிற்றில் கத்தியால் குத்தியவுடன் தடுக்க சென்ற தங்கமுத்து விற்கும் கையில் கத்திகுத்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குமரவேல், தங்கமுத்துவும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, சுப்புராஜ், சசி குமார், ராமர் ஆகியோரை கைது செய்துள்ளனர். ஜெயபிரகாஷ் கமுதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Next Story