கோவை நியூ சித்தாபுதூர் கோவிலில் சிலை திருட்டு


கோவை நியூ சித்தாபுதூர் கோவிலில் சிலை திருட்டு
x
தினத்தந்தி 10 March 2021 1:58 AM IST (Updated: 10 March 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கோவை நியூ சித்தாபுதூர் கோவிலில் சிலை திருட்டு போனது.

கோவை

கோவை நியூ சித்தாபுதூர் ஜவஹர் நகரில் கருவலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பிளமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நடராஜன் (வயது 68) இருந்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு 8 மணி அளவில் வழக்கம் போல் பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

 இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த மாரியம்மன் சிலை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடராஜன் நேற்று முன்தினம் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்

 அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிலையை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story