பாவூர்சத்திரத்தில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரத்தில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் துரை, இளைஞரணி செயலாளர் செல்வா, செயற்குழு உறுப்பினர் ராஜசேகர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி சார்பில், ச.ம.க. வேட்பாளர்கள் தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் ஜெயச்சந்திரபாண்டியன், நகர செயலாளர்கள் பொன் ராஜகோபால், ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story