மணப்பாறை அருகே இறந்த காளைக்கு இறுதி சடங்கு


மணப்பாறை அருகே இறந்த காளைக்கு இறுதி சடங்கு
x
தினத்தந்தி 10 March 2021 2:41 AM IST (Updated: 10 March 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே இறந்த காளைக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.

மணப்பாறை அருகே
இறந்த காளைக்கு இறுதி சடங்கு
மணப்பாறை, 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு காளையை வளர்த்து வந்தார். பல்வேறு பகுதிகளில் நடைபெறும் எருது ஓட்டங்களில் இந்த காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வயது முதிர்வின் காரணமாக காளை உயிரிழந்தது. இதையடுத்து காளையின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்த காளைக்கு இறுதி சடங்குகள் செய்து காளையை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மாலை அணிவித்தும், வேட்டி அணிவித்தும் காளைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளையை ஊர்வலமாக தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

Next Story