கின்னஸ் உலக சாதனைக்காக தவம் நிகழ்ச்சி ‘யூ-டியூப்' மூலம் நடத்தப்படுகிறது
கின்னஸ் உலக சாதனைக்காக தவ நிகழ்ச்சி ‘யூ-டியூப்' மூலம் நடத்தப்படுகிறது
திருச்சி, மார்ச்.10-
உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டல தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வேதாந்த மகரிஷியால் தொடங்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் வருகிற 28-ந்தேதி மாலை 6 மணிக்கு உலக அமைதிக்காக ஸ்கை யோகா என்கிற யூ-டியூப் மூலம் தவம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம். இதில் பங்கேற்பவர்களுக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில் கின்னஸ் சாதனை சான்றிதழ் அவர்களது இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவர் அவர் கூறினார்.
Related Tags :
Next Story