செங்கோட்டை அருகே வியாபாரிகளிடம் இருந்து ரூ.4.57 லட்சம் பறிமுதல்


செங்கோட்டை அருகே வியாபாரிகளிடம் இருந்து ரூ.4.57 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2021 2:47 AM IST (Updated: 10 March 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே வியாபாரிகளிடம் இருந்து ரூ.4.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் வணிக நோக்கத்திற்காக வந்து செல்லுவது வழக்கம்.

தற்போது மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் இப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவர் சிக்கந்தர் பீவி தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், பறக்கும்படை குழுவினர் தமிழக - கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த ஜோஸ்வா, ஜெய்மான் ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டதாக கூறி ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை பறக்கும் படையினர் செங்கோட்டை தாசில்தார் ரோஷன்பேகத்திடம் ஒப்படைத்தனர்.

பணம் கொண்டு வந்தவர்கள் வாத்து வியாபாரி என்றும் தமிழகத்திற்கு வந்து வாத்து வாங்க கொண்ட வந்த பணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story