தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம்


தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 March 2021 3:09 AM IST (Updated: 10 March 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி திவிரமாக நடைபெற்றது வருகிறது.

ஈரோடு
தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி திவிரமாக நடைபெற்றது வருகிறது. 
முன்பதிவு
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்படைந்து வருகிறது. 
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வீடு வீடாக தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளனர். இதுபோல் தலைவர்கள், கட்சி வேட்பாளர்கள் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஈரோட்டில் உள்ள கட்சி கொடி உற்பத்தியாளர்களிடம் அரசியல் கட்சியினர் கொடிகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர்.
கட்சி கொடிகள் தயாரிப்பு
இதனால் ஈரோட்டில் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்து உள்ளது. அனைத்து கட்சிகளின் கொடிகளும் தயாரிக்கப்படுகின்றன. கட்சியினர் கேட்கும் துணிகளில் இந்த கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் கொடிகள் அனுப்ப தயாராக உள்ளன.
இதுபற்றி உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கட்சி கொடி தயாரிப்பு தீவிரம் அடைந்து உள்ளன. அனைத்து கட்சியினரும் எங்களிடம் கொடிகள் கேட்டு உள்ளனர். அதிக அளவில் அ.தி.மு.க., தி.மு.க. கொடிகள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் கணிசமான அளவு கொடிகள் தயாரித்து இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் எந்த அளவுக்கு விற்பனை ஆகும் என்ற ஒரு அளவு உள்ளது. அதன் அடிப்படையில் கொடிகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறோம். வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்னர் விற்பனை தொடங்கும் என்றார்.

Next Story