பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம்; 200 வாழைகள் நாசம்


பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம்; 200 வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 10 March 2021 3:11 AM IST (Updated: 10 March 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 200 வாழைகளை மிதித்து நாசம் செய்தது.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 200 வாழைகளை மிதித்து நாசம் செய்தது. 
யானைகள் அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட விளாமுண்டி வனச்சரகத்தில் காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகிறது. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் பவானிசாகர் அருகே உள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராசு, தங்கராஜ், நஞ்சுண்டசாமி ஆகியோரின் தோட்டங்களில் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
இழப்பீடு கோரிக்கை
பின்னர் தோட்டத்தில் நன்றாக வளர்ந்திருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. நேற்று காைல வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்ற 3 விவசாயிகளும் வாழைகள் முறிந்து கிடப்பதை பார்த்து வேதனை அடைந்தார்கள். சுமார் 200 வாழைகள் நாசமடைந்து கிடந்தன. 
இதுபற்றி விவசாயிகள் விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய வாழைகளை பார்வையிட்டு கணக்கெடுத்தனர். அப்போது விவசாயிகள் நாசமடைந்து வாழைகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும், மேலும் யானைகள் காட்டை விட்டு வெளியேறும் வழித்தடங்களில் அகழி அமைத்து கண்காணிக்கவேண்டும் என்று கோரிக்கை விடு்த்துள்ளார்கள். 

Next Story