பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் ஓராண்டுக்கு பிறகு இன்று திறப்பு
பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் ஓராண்டுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காரமடை,
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்குட்பட்ட பரளிக்காடு, பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையங்கள் உள்ளது. இது வனத்துறையினரால் பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. இதனை நம்பி பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 21 பரிசல் ஒட்டுநர்கள், 12 மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அகற்றப்பட்டதையடுத்து, சூழல் சுற்றுலா மையத்தில் காரமடை வனத்துறையினர் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் முடிவடைந்த நிலையில் பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று (புதன்கிழமை) மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்க உள்ளதாக காரமடை வனச்சரகர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு வருகிறவர்கள் coimbatoreewilderness.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். சுற்றுலா வரும் பயணிகளுக்கு காலை 10 மணிக்கு சுக்கு காபி,மதிய உணவிற்கு கேசரி, வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, குருமா, தயிர்பச்சடி, சிக்கன்குழம்பு, களி, கீரை, தயிர் சாதம் உடன் ஊறுகாய், வாழைப்பழம், சாதம், ரசம், வடகம், கேரட், வெள்ளரி, வெங்காயம் கலந்து (வெஜிடபிள் சாலிட்) வழங்கப்படும்.
மேலும் பரிசல் பயணம், மற்றும் ஆற்றோர நடைப்பயணம் தொடர்ந்து பவானி ஆற்றங்கரையில் ஆனந்தகுளியல் வழக்கம்போல் நடைபெறும். வாரத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story