ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

செங்கல்பட்டு, தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரேஷ்பச்சோ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகை கடை உரிமையாளர்கள், வங்கி ஊழியர்கள், கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள், அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது, வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கூடாது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

பிற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ இடையூறு ஏற்படுத்த கூடாது, பிற அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சுவரொட்டிகளை நீக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story