பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரியகோவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரியகோவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால், சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் தனது நண்பர் விஜயன், மணி ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கரியகோவில் நீர்தேக்கத்திற்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். பின்னர் செல்வமணி மட்டும் நீர்த்தேக்கத்தில் இருந்துள்ளார். மற்ற 2 பேரும் வீட்டுக்கு சென்று விட்டனர். செல்வமணி நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த நிலையில் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள், நண்பர்கள் செல்வமணியை தேடி நீர்த்தேக்கத்துக்கு வந்தனர். அப்போது கரையில் அவரது ஆடைகள், செல்போன் ஆகியவை இருந்தன. தொடர்ந்து ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், கருமந்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்த செல்வமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story