அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வரின் காரை திருடிய வேளாண்மை உதவியாளர் கைது


அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வரின் காரை திருடிய வேளாண்மை உதவியாளர் கைது
x
தினத்தந்தி 10 March 2021 3:04 PM IST (Updated: 10 March 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை உதவியாளர் கைது

தலைவாசல்:
தலைவாசல் அருகே வி.கூட்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி முதல்வராக பணி புரிந்து வருபவர் இளங்கோ (வயது 50). இவருக்கு அரசு ஒதுக்கீடு செய்த கார், கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 27-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த போது திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேளாண்மை உதவியாளராக பணிபுரிந்து வந்த சுமன் (40) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சக்திவேல் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரை திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று சுமனை கைது செய்தனர். மேலும் நாமக்கல் மாருதி நகர் பகுதியில் உள்ள சுமனின் வீட்டின் அருகே மறைத்து வைத்து இருந்த காரையும் போலீசார் மீட்டனர். அந்த காரின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்
தலைவாசல், மார்ச்.10-
தலைவாசல் அருகே வி.கூட்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி முதல்வராக பணி புரிந்து வருபவர் இளங்கோ (வயது 50). இவருக்கு அரசு ஒதுக்கீடு செய்த கார், கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 27-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த போது திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேளாண்மை உதவியாளராக பணிபுரிந்து வந்த சுமன் (40) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சக்திவேல் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரை திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று சுமனை கைது செய்தனர். மேலும் நாமக்கல் மாருதி நகர் பகுதியில் உள்ள சுமனின் வீட்டின் அருகே மறைத்து வைத்து இருந்த காரையும் போலீசார் மீட்டனர். அந்த காரின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

Next Story