எடப்பாடி அருகே காரில் கொண்டு சென்ற 90 சேலைகள் பறிமுதல்
காரில் கொண்டு சென்ற 90 சேலைகள் பறிமுதல்
எடப்பாடி:
எடப்பாடி அருகே காரில் கொண்டு சென்ற 90 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எடப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சங்ககிரி-எடப்பாடி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அருகில் பறக்கும்படை அலுவலர் ரஜினிகாந்த் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
90 சேலைகள்
காரில் உரிய ஆவணங்கள் இன்றி 90 சேலைகள் இருந்தன. இது குறித்து காரில் வந்த ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு அவர் வியாபாரத்துக்காக சேலைகளை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 90 சேலைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட சேலைகள் எடப்பாடி சட்டசபை தேர்தல் அதிகாரி தனலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story