சேலத்தில் என்ஜினீயர் வீட்டில் கணினிகள் திருட்டு சிறுவன் கைது
என்ஜினீயர் வீட்டில் கணினிகள் திருட்டு
சேலம்;
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 32). என்ஜினீயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 கணினிகள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story