கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பஸ் தடுத்து நிறுத்தம்
கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
கயத்தாறு, மார்ச்:
கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
அரசு பஸ் தடுத்து நிறுத்தம்
நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் வழியில் கயத்தாறில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சங்கச்சாவடியில் தற்போது மத்திய அரசின் பாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் விரைவாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பஸ்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டு வந்த அரசு பஸ் கயத்தாறு சுங்கச்சாவடிக்கு வந்தபோது ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
பயணிகள் அவதி
அந்த பஸ்சுக்கான பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் பஸ்சை தடுத்து நிறுத்தியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். தங்களை மாற்று பஸ்சில் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அந்த வழியாக வந்த வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
அந்த பஸ், சுங்கச்சாவடியின் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆகவே போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story