வேலூர் அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
வேலூர் அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள பாலேகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன் கோழிப்பண்ணை அதிபர். இவருடைய மகன் சரவணன் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரிடம் ஆன்லைனில் தொடர்பு கொண்ட கும்பல் ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பணம் அனுப்பினால் இரட்டிப்பாக பணம் தருவதாகவும் மேலும் கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பி மாணவர் சரவணன் பல கட்டங்களாக ரூ. 1½ லட்சம் வரை கட்டினார். அந்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்கவில்லை. மேலும் கமிஷன் தொகையையும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த கும்பலை சரவணன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் அவர்கள் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் இரட்டிப்பு பணம் தருவதாக யாராவது கூறினால் நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story