திபெத்தியர்கள் அமைதி ஊர்வலம்
திபெத்தியர்கள் அமைதி ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.
ஊட்டி,
திபெத்தில் இருந்து அகதிகளாக வந்த திபெத்தியர்களுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கடைகள் வைத்து வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அங்கு திபெத்தியர்கள் கம்பளி ஆடைகள் போன்ற கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நீலகிரி திபெத்தியன் அகதிகள் நலவாழ்வு சங்கம் சார்பில் திபெத்தை சீனா கைப்பற்றிய 62-ம் ஆண்டையொட்டி அமைதி ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற வேண்டும், திபெத்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,
திபெத்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஊட்டியில் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story