கேரளாவில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை


கேரளாவில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 10 March 2021 10:00 PM IST (Updated: 10 March 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கூடலூர்:
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் மற்றும் தினசரி கேரளாவுக்கு வேலைக்கு சென்று திரும்பும் தோட்ட தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அங்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் முகாமிட்டு, கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளிடம் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் கம்பம்மெட்டு பகுதியில் க.புதுப்பட்டி அரசு ஆரம்ப நிலைய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், கேரளாவில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

Next Story