திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் வலம் வந்தது- பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் வலம் வந்தது. ஒராண்டுக்கு பிறகு ஓடியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செந்தூர், மார்ச்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குறிப்பிட்ட சில நாட்களை தவிர ஆண்டு முழுவதும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிபிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
பக்தர்கள் கோவிலில் நேரடியாகவோ, இணைய தலம் மூலமாக முன்பதிவு செய்து ரூ.2500 கட்டணம் செலுத்தி குடும்பத்துடன் தங்க தேர் இழுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்க தேர் ஓடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலையில் திருச்செந்தூரை சேர்ந்த சமிக்ஷா குடும்பத்தினர் தங்கத்தேரை இழுத்தனர். கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் தங்க தேரில் வந்த சுவாமி ஜெயந்திநாதரை மகிழ்ச்சியோடு வழிபட்டனர்.
Related Tags :
Next Story