ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்
மன்னார்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
மன்னார்குடி- கும்பகோணம் சாலையில் மன்னார்குடியை அடுத்த குருவைமொழி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்த கும்பகோணத்தை சேர்ந்த வியாபாரிகளான நரேஷ், முகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்
இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் பக்கிரிசாமி, தெய்வநாயகி மற்றும் மன்னார்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோமகன், போலீசார் உள்ளிட்ட பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மன்னார்குடி உதவி கலெக்டருமான அழகர்சாமியிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story