தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
ராமநாதபுரம்,
வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக முன்னாள் இளநிலை படை அலுவலர், முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, மேற்படி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமும், தகுதியும், உடல் திடகாத்திரம் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் கீழ்கண்ட விவரங்களை கொண்ட விருப்ப விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் பெற்று நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story