வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 March 2021 11:53 PM IST (Updated: 10 March 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்

பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள கிழம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவர் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் மாவிலங்கை கிராமம் அருகே ரோட்டை கடந்துள்ளார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஆறுமுகம் மீது மோதினர். 
இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை அருகே உள்ள மேலச் சூரவந்தியை சேர்ந்த அஜித்குமார் (23) ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூரைச் சேர்ந்த அலெக்ஸ் (23) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இதேபோல் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் பூங்கா நகர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.இதில் கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமு (50), மதுரையைச் சேர்ந்த பிரசன்னா (25) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகுரு (23) என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து  பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story