பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் ரூ1½ கோடி வரி வசூல்


பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் ரூ1½ கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 10 March 2021 11:55 PM IST (Updated: 11 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் ரூ.1½ கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாக்கினாம் பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சிக்கினாம்பாளையம், கஞ்சப்பட்டி, நாயக்கன் பாளையம், உள்பட 26 ஊராட்சிகள் உள்ளன. 

இந்த ஊராட்சிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்பட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ரூ.1½ கோடி வசூல் 
அதன்படி வீட்டு வரியாக ரூ.98.85 லட்சம், குடிநீர் கட்டணமாக ரூ.1.64 கோடி, தொழில் வரியாக ரூ.38.23 லட்சம், தனியார் கல்வி நிறுவனங்களின் சொத்து வரி ரூ.44.74 லட்சம் ஆகியவை வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

அதன்படி வரிவசூலில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி தற்போது இந்த ஊராட்சிகளில் வீட்டு வரியாக ரூ.43.64 லட்சம், குடிநீர் கட்டணமாக ரூ.58.29 லட்சம், தொழில்வரியாக ரூ.22.98 லட்சம், கல்வி நிறுவனங்கள் சொத்துவரி ரூ.22.87 லட்சம் என்று ரூ.1 கோடியே 47 லட்சத்து 78 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுல்தான்பேட்டை ஒன்றியம் 

இது குறித்து மேலும் அதிகாரிகள் கூறும்போது, ஊராட்சி பகுதிகளில் வரிவசூல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதத்துக்குள் மீதமுள்ள வரியினங்களை வசூலித்து விடுவோம் என்றனர். 

அதுபோன்று சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் வரிவசூலை ஒன்றிய அதிகாரிகள் சிவகாமி மற்றும் ரவிச்சந்திரன் தீவிரப்படுத்தி உள்ளனர். 


Next Story