மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
நச்சலூர்
திருச்சி பெரிய மிளகுபாறை ஒண்டி கருப்பு கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் கடந்த 8-ந்தேதியன்று கரூர் மாவட்டம் சின்ன பனையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் களத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பாப்பக்காபட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (37) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் காயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story