மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் ஓட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் ஓட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 12:51 AM IST (Updated: 11 March 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் ஓட்டம்

அருப்புக்கோட்டை,மார்ச்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியைச் சேர்ந்த பல்வேறு துறை பேராசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் இசக்கிதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டம் கல்லூரியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்று அடைந்தது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் அனைவரையும் தேர்தல் அலுவலர் முருகேசன் வாழ்த்தி நிறைவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின்  ஒருங்கிணைப்பாளர் கோபால் செய்திருந்தார்.

Next Story