விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்


விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 11 March 2021 12:52 AM IST (Updated: 11 March 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

காரியாபட்டி,மார்ச்
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எழுது பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எழுது பலகையில் கையெழுத்திட்டனர். திருச்சுழி பஸ் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், உங்கள் எதிர்காலம் உங்கள் வாக்கு என்று அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை தேர்தல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களில் ஒட்டினர்.

Next Story