மகளிர் தின விழா
சிங்கம்புணரியில் மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி நாட்டார்மங்கலம் சாலையில் உள்ள சென் ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி செயலர் சூசை மேரி மற்றும் முதல்வர் மார்கரெட் பாஸ்டின் அனைவரையும் வரவேற்றார். தேர்தல் விழிப்புணர்வுக்கான கோலப்போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் வாக்களிக்கும் முறை, வாக்களிப்பதன் நோக்கம், அதன் முக்கியத்துவம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.ஓவியம், கோலப்போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் திருப்பத்தூர் தேர்தல் அலுவலர் சிந்து ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் ராஜாமுகமது, சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர்கள் சபரி, கதிரேசன், அருண் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story