திருமுருகநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா


திருமுருகநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா
x
தினத்தந்தி 11 March 2021 1:17 AM IST (Updated: 11 March 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா

அனுப்பர்பாளையம்:-
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவையொட்டி திருமுருகநாதருக்கு 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவையொட்டி திருமுருகநாதருக்கு இன்று (வியாழக்கிழமை) இரவு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு முதல் கால பூஜையும், 10.30 மணிக்கு 2-ம் காலம், நள்ளிரவு 12.30 மணிக்கு 3-ம் காலம், நாளை அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது. 
கொரோனா பரவல் காரணமாக திருமுருகநாதருக்கு நடைபெறும் 4 கால பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்க அனுமதி இல்லை. 63 நாயன்மார்கள் மற்றும் உற்சவமூர்த்திக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் மட்டும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
மேலும் இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பான முறையான அறிவிப்பு பதாகை கோவில் வாசலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

Next Story