டெய்லரின் உடல் முஸ்லிம்கள் உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது


டெய்லரின் உடல் முஸ்லிம்கள் உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 11 March 2021 1:26 AM IST (Updated: 11 March 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

டெய்லரின் உடல் முஸ்லிம்கள் உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வி.களத்தூரை சேர்ந்தவர் மணி (வயது 58). இவர் சவுதி அரேபியாவில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி திடீரென மாரடைப்பால் மணி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினர் வி.களத்தூரை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியின் கிளைத் தலைவர் ஜமீல் பாஷாவை தொடர்புகொண்டு வெளிநாட்டிலுள்ள மணியின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முகமது வெளிநாட்டிலுள்ள கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மணியின் உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடுகளை செய்தார். அனைத்தொடர்ந்து நேற்று மணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான வி.களத்தூர் கொண்டு வரப்பட்டது. பின்னர் மணியின் உடலை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், மணியின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகள் நடந்தன. இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இறந்த டெய்லரின் உடல்

Next Story