வெப்படை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


வெப்படை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2021 1:51 AM IST (Updated: 11 March 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

வெப்படை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.

பள்ளிபாளையம்,

வெப்படை அருகே உள்ள பச்சாம்பாளையத்தில் மரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் முதியவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் முதியவர் பிணத்தை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story