காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், பணியாளர்கள், உதவியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவின்ராஜ்குமார் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story