வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழப்பழுவூர்
வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்றும், தேர்தல் நாள் வடிவத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ரத்னா கலந்துகொண்டு பேசினார். பின்னர் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து கீழப்பழுவூர் பகுதிகளைச் சுற்றி உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் மாணவ-மாணவிகள் வழங்கினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், தாசில்தார் ராஜமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, பள்ளி முதல்வர் தனவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story