ஈரோட்டில் முகக்கவசம் அணியாத 80 பேருக்கு அபராதம்


ஈரோட்டில் முகக்கவசம் அணியாத 80 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 March 2021 2:29 AM IST (Updated: 11 March 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் முகக்கவசம் அணியாத 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோட்டில் முகக்கவசம் அணியாத 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முகக்கவசம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தாக்கம் மெதுவாக குறைய தொடங்கியது. இருந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
ரூ.200 அபராதம்
ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு உடனடியாக ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இதில் ஒரே நாளில் 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலானது இதேபோல் கடைகள், வங்கிகள், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Next Story