பண்ருட்டி சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது


பண்ருட்டி சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 March 2021 2:38 AM IST (Updated: 11 March 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

கடலூர், 
பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னையன் (வயது 60) தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சின்னையன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சின்னையனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, தடுப்புக்காவல் சட்டத்தில் சின்னையனை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் உள்ள சின்னையனிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story