வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள இந்தியன் வங்கியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில் நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள இந்தியன் வங்கியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, ஏ.டி,எம். எந்திரங்களில் வரும் ரசீதுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கும் பணிகளையும், வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டி வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இந்தியன் வங்கியின் 80-க்கும் மேற்பட்ட கிளைகளிலும், இந்தியன் வங்கியின் 84-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். எந்திரங்களிலும், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் தொடர்ந்து அச்சிடப்படும் என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எப்சூர் ரகுமான், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் மஞ்சுநாத், மணவாளநகர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுவேதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story