பாப்பிரெட்டிப்பட்டியில் பா.ம.க.வினர் திடீர் மறியல்
பாப்பிரெட்டிப்பட்டியில் பா.ம.க.வினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பொம்மிடி:
நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி மற்றும் பென்னாகரம் தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்காததால் அ.தி.மு.க.வை கண்டித்து பா.ம.க.வினர் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த மறியலுக்கு கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த மறியல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story