மூதாட்டியை மிரட்டி நகை பறித்த வேலைக்காரபெண், வாலிபர் கைது
மூதாட்டியை மிரட்டி நகை பறித்த வேலைக்காரபெண், வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
கணபதி,
கோவை காந்திமாநகர் எல்.ஐ.சி. 2-வது பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 74). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை பார்த்து விட்டு சென்றவர் சேலத்தை சேர்ந்த சாயின் பானு (35).
இந்த நிலையில் சாயின்பானு தனக்கு தெரிந்த பிரகாஷ் (25) என்பவருடன் சேர்ந்து கொண்டு ராஜலட்சுமி வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் ராஜலட்சுமி என்னிடம் பணம் இல்லை நான் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் சேர்ந்து, ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 2 பவுன் தங்கச்சங்கிலியை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாயின்பானு, பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story