கத்திப்பாரா மேம்பாலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி டிராவல்ஸ் உரிமையாளர் பலி


கத்திப்பாரா மேம்பாலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி டிராவல்ஸ் உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 11 March 2021 5:45 PM IST (Updated: 11 March 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

கத்திப்பாரா மேம்பாலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அயஞ்சேரி பொதிகை சாலையை சேர்ந்தவர் லூர்து வின்சென்ட் (வயது 31). இவர், கோடம்பாக்கத்தில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு கோடம்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லூர்து வின்சென்ட் தலையில் பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தும், பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த வரதராஜன் (41) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story