திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 இடங்களில் வேட்புமனுதாக்கல் நடக்கிறது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 இடங்களில் வேட்புமனுதாக்கல் நடக்கிறது.
x
தினத்தந்தி 11 March 2021 7:43 PM IST (Updated: 11 March 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 இடங்களில் வேட்புமனுதாக்கல் நடக்கிறது.

திருவண்ணாமலை

வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 

வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். விடுமுறை நாளான 13 மற்றும் 14-ந் தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக 8 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற உள்ளது. 

8 இடங்களில் நடக்கிறது

செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு செங்கம் தாலுகா அலுவலகத்திலும், திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கலசபாக்கம் தொகுதிக்கு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்திலும், போளூர் தொகுதிக்கு போளூர் தாலுகா அலுவலகத்திலும், ஆரணி தொகுதிக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்திலும், செய்யாறு தொகுதிக்கு செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வந்தவாசி தொகுதிக்கு வந்தவாசி தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். வேட்புமனுக்களை வருகிற 22-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story