சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் உடல்நல பாதிப்பு
சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணிக்கு திடீரென உடல்நலம் பாதித்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி உள்பட 147 பயணிகள் இருந்தனா்.
விமானம் ஓடுபாதையில் ஓடத்தயாரானபோது விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னை பெரம்பூரைச் சோ்ந்த தயாளன் (வயது 64) என்ற பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதையறிந்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான நிலைய மருத்துவ குழுவினா் விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். அதன்பின்பு அவா் மயக்கம் தெளிந்து எழுந்தாா். ஆனாலும் அவர், தான் தொடா்ந்து பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறினாா்.
இதையடுத்து தயாளனின் பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து அவர், கீழே இறக்கப்பட்டாா். அதன்பின்பு 146 பயணிகளுடன் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story